Vishnu Sahasranamam Lyrics in Tamil with PDF

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Looking for Vishnu Sahasranamam Lyrics in Tamil then you’re at the right place. We’ve added Vishnu Sahasranamam (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்) Lyrics by P Senthilkumar. The lyrics is created without breaking its original form.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்தை பாட ஆரம்பிப்போம்

Vishnu Sahasranamam Lyrics in Tamil

vishnu sahasranamam lyrics tamil

ஓம் நிலவின் ஒலியெனப் பொங்கும் திருமுகன் வெண்துகிலோன் கரங்கள் நான்கால் காக்கும் விஷ்ணு பொற்பாதம் த்யானமே

வ்யாசர் சுகமுனி தந்தையுமாம் மைந்தர் பராச்சர முனியின் வசிஷ்டரின் கொள்ளுப்பேரர் சக்தி பேரரை வணங்குகிறேன்

முனி வ்யாசர் விஷ்ணு ஆவாரே விஷ்ணு வியாசர் ஆவரே பணிந்தேன் ப்ரஹ்ம உருவே வசிஷ்டர் குலம் வணங்கினேன்

முரண்பாடற்ற தூயவன் நிரந்தரம் பரமாத்மனே நிலைத்த வடிவம் தாங்கி வென்றிடும் விஷ்ணு ரூபனே

எண்ணும் பொழுதில் தனை நீக்கி பிறவிப் பிணியது போக்குவான் அவன் பதம் பணிந்தேனே போற்றினேன் தினம் போற்றினேன் ஓம் நமோ விஷ்ணுவே ஸ்ரீ விஷ்ணுவே

ஸ்ரீ வைசம்பாயனர் உரைத்தார் தர்மம் தவறாத செல்வங்கள் வீடு பேரும் புண்யமுமே அடைந்திடல் தெரிந்த தர்மர் கேள்வி கேட்டார் பீஷ்மரை

தர்மபுத்திரர் உரைத்தார் எதாகும் ஒன்றான தெய்வம் எந்த தெய்வம் சிறந்தது உடன் பலன் தருவார் யாரே வணங்கினால் எது சுபம் தரும்

எத்தர்மம் ஸகல தர்மத்தை விஞ்சும் தருமம் ஆகும் மந்திரம் நான் என் சொல்வேன் ஜென்ம ஸம்ஸார பந்தம் விட

ஸ்ரீ பீஷ்மார் உரைத்தார் ஜெகன்நாதன் தேவ தேவன் அனந்தன் புருஷோத்தமன் விஷ்ணு நாமம் ஆயிரங்கள் துதித்தால் துன்பம் இல்லை

இறைவன் அவனைத் தொழுதால் த்யானம் என்றும் செய்வதால் வேண்டும் வரம் அவன் தருவான் துன்பங்கள் பறந்திடுமே

அநாதி அவனே விஷ்ணு அகில லோக தலைவனாம் அவனை என்றும் துதித்தாலே துன்பம் தொடராமல் ஓடிடும்

ப்ரம்மத்தின் ஸர்வ தர்மத்தின் புகழெல்லாம் பெருக்கி அருள்பவன் உலகநாதன் பூதநாதன் உயிரின் உள்ளே இருப்பவன்

உயர்ந்தது உத்தமர் தர்மம் மனிதன் பிறந்ததின் பயனாம் ஹரி நாமம் சொல்வதேயாகும் அவன் புகழைச் சொல்வது மேலாம்

பேரொளியில் பெரியதாகும் தவத்தினிலே மிகப்பெரிது பிரமாண்டம் எதுவோ அதுவே உயிர் காக்கும் ஒரே வடிவம்

தூய்மையிலே மிகத்தூய்மை மங்களத்தில் உயர்ந்தது தேவரின் தேவன் அவனென்பார் உயிர்குலத்தின் அழிவிலா தந்தை

உயிர் உற்பத்தி எங்கேயோ கல்ப காலம் தொடங்கையிலே ப்ரளயத்தில் எங்கேயெல்லாம் லயமாகி அடங்கிடுமோ

அந்த தெய்வம் ஒரே தலைவன் ஜகந்நாதன் ஆகிடுவான் விஷ்ணுவின் நாமமாயிரங்கள் பவப்பிணியைப் போக்கிடுமே

எந்த நாமங்கள் சுபமாமோ மஹாத்மாக்கள் சொன்னதுவோ அவைகள் புருஷார்த்ததை தரும் நாமங்கள் கேட்பாய்

ஹரி நாமம் ஆயிரங்கள் வேதவ்யாஸர் அதன் முனிவர் சந்தஸ் அனுஷ்டுப் அவன் ஆவான் தலைவன் தேவகி புத்ரன்

அம்ருதாம் சூத்பவ பீஜம் சக்தி தேவகி மைந்தனாம் த்ரிஸாமா ஹ்ருதயம் ஆகும். தருமாமே தினம் சாந்தியை

விஷ்ணு வீரன் மஹாவிஷ்ணு உலகாளும் மஹேஸ்வரன் அரக்கர்மாய பல ரூபம் எடுத்த புருஷோத்தமன்

Also Read: Lalitha Sahasranamam Lyrics in Tamil + Downloadable PDF

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

இந்த ஸ்ரீ விஷ்ணுவின் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரத்திற்கு ஸ்ரீ வேத வ்யாஸ் பகவான் சிரசில் அனுஷ்டுப் நாவிலே ஸ்ரீ மஹாவிஷ்ணு பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன் தேவதை அம்ருதாம் ஸ்ரீத்பவோ என்பது பீஜம் தேவகி நந்தன என்பதே சக்தியாம் உத்பவ க்ஷோபனோ மார்பில் உயர் மந்திரம் ரங்க ப்ருந் நந்த கீ சக்ரியே புஜத்தினில்

ஸார்ங்க தன்வா க தா த ர திசை அஸ்திரம் ரதாங்க பாணி ரக்ஷோப்ய அது கண்கள் த்ரிஸாமா ஸாமக மார்பினில் கவசம் ஆனந்தம் பரப்பிரம்மனின் யோனிதான்

ருதுஸ் ஸூதர்ஷன கால அது காப்பாகும் ஸ்ரீ விஸ்வரூபன் அவன் த்யானம் ஸ்ரீ மஹா விஷ்ணு அருள் வேண்டியே நாமம் ஆயிரம் சொல்ல உபயோகம்

தியானம் திருப்பாற்கடலில் நிறைந்த மணலிலே முத்து தூயதாய் கிடைத்திடுமே முத்தால் மாலை ஆஸனமாய் ஸ்படிகமணி மிஞ்சும் முத்துபோல் அங்கமாகுமே வெள்ளி மேகம் மழை தரவே மழையை மகிழ்ச்சியாய் கண்டு ஆனந்தித்தே சங்கு சக்ரம் கரம் என்திக் காப்பவனே கதை தாங்கும் முகுந்தனே

நிலம் பாதம் வானம் நாபி வாயுதேவன் உயிர் சந்த்ர சூர்யாதி கண்கள் திக்கே காது சிரம் உலகம் அலது வாயாம் கடலும் புனை ஆடையாகும். யாரின் வயிற்றில் உலகம் சுரர் நரர் உளரோ போக கந்தர்வர் உளரோ இன்பம் அதி விசித்ரம் ஆன மூவுலகாளும் அந்த விஷ்ணு வந்தனம் ஓம் நமோ பகவதே வாஸூதேவாய

சாந்த தோற்றம் பாம்பில் ஸயனம் கமல நாபி தலைவன் உலகாதாரன் வானம் போலான் மேக வண்ணன் அழகன் லட்சுமிநாதன் கமல கண்ணன் யோகிகள் த்யானமாவான் வாழ்க்கைத் துயர் இலை என அருள் நாதன் விஷ்ணு வந்தனம்

மேகக் கருமை, மஞ்சள் பட்டாலே ஆடை ஸ்ரீ வத்ஸத்துடன், கௌஸ்துபம் மின்னும் அங்கம் நல்லோர் சூழும் தாமரை மலரே விழியும் உலகத் தலைவன், விஷ்ணு பாதம் வந்தனம் சங்கொடு சக்ரம் நற்க்ரீடம் குண்டலம் மஞ்சள் ஆடை, தாமரையே விழிகள் அபார மார்பணி செய்யும் கௌஸ்துபம் நான்கு தோளன் விஷ்ணு வந்தனம்

Sri Vishnu Sahasranamam in Tamil

Sri Vishnu Sahasranamam in Tamil

Know more about Vishnu Sahasranama here

ஓம் உலகின் கர்த்தா ஆனாய் நீயே வசதிகார தேவ உருவே காலாமில், படைத்தும் காக்கும் ஆத்மாவே, ப்ரபஞ்சமே புண்யாத்மா, பரமாத்மாவும் மோக்ஷத்தை தருவதும் நீயே ஸர்வமும் காணும் பொருளே அறிபவனே, நிலையானவனே

யோகம் உணர்த்தி விடும் உன்னை ப்ரதான ஈஸ்வரன் நீயே நரசிம்ம ரூபன், திருமால் கேசவன், புருஷோத்தமன் தோற்றம், மறைவு உன்னாலே தான் எல்லாமும் அறிபவன் நீயே முக்குணம் தீண்டிடா தூயன் கதியாய், வித்தியாகினானே

உயர்ந்தோன், சூரியன் அவனேயாம் கமல விழியோன், இசை வடிவன் அனாதியானோன், பெரியோன் பலன் தரும் உத்தமோத்தமன் சாட்சி ரூபன் புலன்கள் ஆளும் பத்மனாபன் ஸூரர் தலைவன் உலகின் சிற்பி மந்த்ர ரூபன் காக்கும், முடிக்கும் பெரியோன்

நிலையான சச்சிதானந்தன் சிவந்த கண்ணன், ப்ரளயரூபன் ப்ரபஞ்ச ஞானம் உடையோன் மங்களன், உலகாள்பவன் உயிரெல்லாம் இயக்கிக் காப்பான் உயர்ந்தோன், பரமன், உயிர் தலைவன் அண்டவாஸி, புவி ஹிருதயன் மாதவன், மதுஸூதனன்

சக்திமான், பலவான், வில்லோன் அறிவாளி, எல்லையும் அற்றோன் உத்தமன், உயர்ந்த வீரன் அறிந்தவன், விதியானவன் சுரர்கள் தலைவன் பரமன் உயிர்களானவன், உலகமானவன் சுழல் கால வடிவன், ஒளியோன் ஞானிகள் போற்றிடும் பெரியோன்

தடை பொடியாக்கிடும் ஈசன் பலன் எல்லார்க்கும் அருள்பவன் அளவிலாத ஆத்ம புருஷன் யோகமெல்லாம் கடந்தவன் உயிர் காக்கின்ற அன்பன் அனைத்தும் சமமெனக் கொள்வான் அனைத்து உலகும் அறியா அகமுள்ளோன், புண்யசீலன்

சிரசு கணக்கிலா உள்ளோன் உலக யோனி, காரணன் அம்ருதன், நிலைத்தவன், அநகன் விஷ்ணுலோகம் கொடுப்பவன் பூரணன் ஒளியினை வீசும் விஷ்வக்ஸேனன் ஜனார்த்தனன் வேதம் காத்தவன் வேதாந்தன் வேதமும், ஞானமும் அவனே

உலகைக் காத்து, விண்ணைக் காத்து தர்மப் பயனின் பலன் தருபவன் வியூகங்கள் நான்கு உடையோன் நாரசிங்கன் நான்கு தோளோன் ஒளிவடிவன் பக்தர்கள் உணர்வை அமிர்தம் எனவே கொள்வான் பகைவர் பகையை மாய்க்கும் உலகின் மூலம், நிரந்தரன்

உபேந்த்ரன், வாமனன், நெடியோன் பலத்தில் மேலான தூயன் துதிப்போர் மேன்மைக்குத் தூண்டும் உயிர்கள் வாழ்ந்திடச் செய்வோன் வீரன், பக்தர் அறியும் சீலன் வித்தையின் தலைவன், மதுரன் புலன்களுக் கெட்டா மாயன் மஹாதீரன், மஹாதேஜன்

சுடர் ஞானம், ஒளிர் வீசும் வளர் சக்தி திகழ் மேனி உயர் ஆத்ம அறிவு கொண்டோன் மலை தாங்கும் கரம் உளான் வில் வீரன், பூமி காத்தோன் மகாலக்ஷ்மி உறைமார்பன் பகை இல்லா பரந்தாமன் லோகத்தை தங்கிடும் தலைவன்

ஒளிர்வான், கதியாய் நிற்பான் பயத்தை நீக்கிடும் அழகன் நாபி பொன்னாய் மின்னும் பத்மநாபன் உயிர் தலைவன் கருத்தாய் காத்திடும் கண்ணன் பக்திக்கு என்றுமே எளியோன் நிறை வீரம் உறை ஞானி தேவர் போற்றும் பராக்ரமன்

மறை பிரமனும் கற்கும் சத்யன், பூமி தாங்கியவன் யோகம் ஆகும் உறக்கம் வைஜெயந்தி தாங்கும் மார்பன் ப்ரஹ்மமே காட்டிடும் பாதன் தர்மன் தரணி காத்திடுவான் கால்கள், சிரசு, ஆயிரமே அதே ஆகும் கண்களுமே

பந்தத்திலே பிடிபடாத மாயவன், காலமானவன் அவன் அக்நியானவன், ஆதி சேஷன், வராகன் அவனே வெள்ளை உள்ளம், அருள் தருமே உலகையும், உயிரையும் காப்பான் நல்லோர்கள் நலத்தைப் பெறுவார் காப்பான் ப்ரளயம் வரும் பொழுது

எதிர் இல்லா உயிர் ஆனான் நிறையோன், கேட்டதைத் தருவோன் மனம் எங்கும், நினைவெல்லாமே நிறைவாய் நின்றவேற்றிடுவான் அதர்மம் அகற்றும் பகலோன் படியாகும் பரப்பரம்மன் பக்தரை காத்து ரட்சிப்பான் நதிக்குக் கடலாய் ஆனான்

புஜமும் பகையை வெல்லும் வேதம் வாக்கில் மலரும் எந்த உருவம் பெரியதாகும் ஒளி காட்டும் பரம்பொருள் சூர்யன் ஒளிரும் உன்னால் ப்ரகாசிக்கும் முதற்பொருளே வேதம் அது போற்றிடும் ப்ரணவம் நிலவொளியே, சூர்யனே நீயே

சந்திரன் ஒளியது ஆனாய் இமைபோல உடன் காப்பாய் பிணியத்தைப் போக்கும் மருந்தே ஸத்யவானே, பராக்ரமனே மூன்று காலம் ஆனவன் நீ காக்கும் இணையில்லாதவா வேண்டுவோர் வேண்டிடும் பொருளை தருவாய் தடையின்றியே தருவாய்

யுகங்களாய், யுகம் காத்தாய் யுகங்களுக்கு அந்தமானாய் அறிந்தார் உன்னை தியானித்தோர் போர்கள் உன்னை வெல்லுமோ உள்ளும், புறமும், உறைமாலே மயிலின் தோகை சிரசில் வெகுளியும் வெல்லும் தீயோரை உலக வாழ்க்கை உன்னாலே

அச்சுதா, உயிரின் உயிரே ப்ராணனே, தேவரின் பலமே கடல் சேரும் நதிபோலே பக்தருக்கு உயிர் நீயே அறம் ஆருயிராய் கொள்வாய் வருவாய் காற்றில் ஏறியே வாஸூதேவா பூமி ஒளியே ஆதிமூலா, காப்பவனே

அலை போல் துன்பமே இல்லா சூரன், வீரன், ஜகந்நாதன் அனுகூலம் ஆன ரூபம் தர்மன், பத்ம விழி கொண்டவன் பத்மநாபா, மலர் கண்ணா இதயமென்னும் தாமரை நீ புராதனத்தின் புண்யாத்மா விசாலன், கருடக் கொடியோன்

யாகப் பலனை ஏற்கும் இணை இல்லா மகாதீரன் லட்சுமி பதியாம் பேரழகன் திருமார்பன், வெல்கின்றவன் அழிவிலா பரமனாம், மாயன் தாங்கும் தாமோதரன் கண்ணன் மலை என பூமி தாங்கி காற்றென வருவான் காக்க

உலகையே வயிற்றில் வைத்தான் பிரளயத்தின் பரமன் அவனே கருவி, காரணம் அவனே புலன்கள் தேடும் மாயன் குறையின்றி அகிலமாள்பவன் த்ருவனுக்கு நல்இடம் தந்தான் பரம்பொருள் நற்குணத்தான் வேண்டும் தரும் கண்ணன்

யோகியர் மகிழும் வடிவன் வழியாய், ஒளியாய் வரும் நாதன் இணையே எங்குமிலா வீரன் தர்மன், தர்ம மகா ப்ரபுவே பூதங்கள் ஐந்தும் இயக்கும் உலகினில் உயிரின் இயக்கம் கனகத் திரளே, பகை வென்றாய் குறையா மகிமையுளன் ஆனாய்

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் – தமிழ்

vishnu sahasranamam tamil translation

சுழல் காலமாய் ஆனாய் எல்லையில் எளியனானாய் தீயாய் தீயோர்களை வென்றாய் ஓய்வுக்கு ஓர் நிழல் ஆனாய் விரிவாகும், காரணப் பொருளே நிலைக்கும் விதையுமாகினாய் நல்லோர் நாடும் பெரும் நேயன் நிறை செல்வன், உயர் வடிவன்

நிலம் ஆனான், நிறைவானான் தர்மமேற்கும், யாகமானான் நக்ஷத்ரமாகி, அதைத் தாங்கி இளைப்பாற்றி இயக்கிடுவான் யாகமாகி, யாகம் போற்றும் கடைத் தேற்றும் கழல் கொண்டான் எதுவும் காணும், உயர் ஆத்மா ஞானத்தின் சிறந்த ஞானியாம்

உயர்வ்ரதன், அழகன், புதிரோன் நல்ஒளி, நற்குணம், அமுதன் மனோஹரன், குற்றமற்றொன் வீர வீரன், தர்மபாலன் மாயவன், எதிலும் உள்ளான் ஆக்குபவன், அழித்துக் காப்பவன் உயிர்களின், பக்தரின், அன்பே உன் வயிற்றில் உயிர்கள் கொண்டாய்

தர்மமே செய்வாய், காப்பாய் ஞானம் ஆயிரம் கொண்டாய் அகம் கொண்டாய் உயர் வாக மயக்கும் மலர் மேனியே கரத்தில் சுழலும் சக்கராயுதம் சிம்ஹ ரூப உத்தமனே ஆதி தேவன், மஹாதேவன் தேவாதி தேவரின் குரு

காப்பவா, காத்திடும் கண்ணா ஞானமானாய், ஸாஸ்வதனே பஞ்ச பூதமும் ஆனாய் வராகனே, தர்மம் சொல்பவனே ஸோமபானத்தைப் பருகும் அமுதே, புகழ் கொண்டவனே நல்லோர் அகம் உள்ளமர்ந்தாய் அவர்க்கெல்லாம் நன்மையே செய்தாய்

உயிரின் உன்னத ஸேவை செய்வோர் துயர் நீக்குவாய் தேவர் நிதி உன்னிடத்தில் உயிர் முடிவும் ஆகிடுவாய் ரதி துணைவன் ஆனாயே அகம் புறமும் பகை வென்றாய் அடியார்கள் ஆனந்தம் காண்பாய் மூன்று லோகம் அளந்தவனே

மகா முனி கபிலன் நீயே பூமியின் நாயகன் நீயே பதங்கள் நிலைகள் மூன்றே மச்சரூபம், சிம்மமும் நீ பெரும் வராகன், கோவிந்தன் சுபம் தரும், பொன்னிறத் தோளன் மஹிமன், அனாதி, வீரன் புத்தி – தத்வமாம்

லீலை பல செய்தவன் க்ருஷ்ணன் பெரும் போரில் தோற்காதவன் ஒளியாய், இருளாய், நிழலாய் நினைப்பதெல்லாம் நடத்துவான் அனைத்தும் அறிவான், நல்லோன் வனமாலீ, கலம் கொண்டவன் ஆதித்யன் ஜோதி, உயர் ஜோதி துதிப்போர்க் குயர் வழியானான்

புலன்கள் சார்ங்க வில்லே கொடியவர் குலமழிப்பான் பகுத்தே வேதம் காத்தவனே வித்தை பதி, பிறக்காதவன் துதிக்கும் சாமங்கள் மூன்றும் துன்பங்கள் துறந்தவன் அவன் சந்யாஸத்தில் சுகம் கொண்டோன் பக்தி, மோட்சம் அருள்பவன்

அமைதி, தந்திடும் அழகன் உலகை படைக்கின்றவனே பாம்பனை கொண்டவன் பசுவை தர்மத்தை விரும்புபவன் புகழ் வென்றோன், நிறைவு கொண்டோன் உலகத்தை அடக்கியே, ஆள்வான் ஸ்ரீ வத்ஸம் லக்ஷ்மி திருமார்பிலே ஸ்ரீபதி தேவரின் தலைவன்

செல்வம், தருவான் ஸ்ரீநிவாஸன் நிதிகளை உலகுக்கே தருவான் ஸ்ரீதரன், ஸ்ரீகரன், புண்யன் ஸ்ரீமான் மூவுலகம் காப்பான் கண்ணன், அழகன், ஸதானந்தன் தலைவன் ஜோதிக் கணங்களுக்கு ஒன்றானான், உயர்வானான் ஐயமில்லா, பெரும் புகழ் கொண்டான்

தலைவன் ஒருவனில்லாத ஆற்றலோன் என்றுமே உள்ளோன் பலஉரு பூமியில் கொண்டோன் ஆனந்தன், சோகம் தீர்ப்பவன் அம-ரர்கள் போற்றிடும் ஜோதி உயர் ஆத்மா, பயம் தீர்ப்பவன் தீயோரைக் கடிந்திடும் வீரத்தின் ஒரு வியூகன்

காலநேமி காலனை, வீரன் சூரன், சூரர் குலத்-தலைவன் மூன்று லோகம், மூவரும் அவனே கேசவன், கேசியை மாய்த்தோன் இஷ்டமெல்லாம் நிறைவு செய்யும் வேதத் தலைவன், அழகன், சீலன் பல-திருவுருவைக் கொண்டோன் எங்கும் உள்ளோன், அர்ஜுனப்ரியன்

ப்ரம்மாண்டத் தலைவன், ப்ரம்மன் வேதப் பொருளதும் ஆனான் ப்ரம்மத்தை காட்டிடும் ப்ரம்மன் வேதத்தை-ஓதுவோர் அன்பன் உயர் வழி – உயர் ஞானம் பெருஞ்சோதி – பெரும் அரவு மஹாயக்ஞம்,உயர் கர்த்தா அவிர் பாகம், அவன் ஆனான்

Vishnu Sahasranamam Tamil PDF [Free Download]

vishnu sahasranamam tamil pdf

To Download Vishnu Sahasranamam Tamil PDF click here

விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் PDF பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்

போற்றும் பக்தரின் நேசன் துதி – போற்றும் துதிப்ரியனாம் பூர்ணன் பூர்த்தி செய்வான் விருப்பம் புண்ய சாலி, பாவம் தீர்ப்பான் மனதிலும் வேகமுள்ளோன் நதி படைத்தோன், ஜோதி ரூபன் தனம் உள்ளோன், வாஸுதேவன் அவிர் பாகனாய், துயில்வோன்

நல்லவர் நாடிடும் நல்லோன் அனுபூதி, ஞானியர் கதியே சூரஸேன்னை, யதுகுலத்தோன் அடைக்கலம் தரும், யமுனை தீரன் உயிர்கள் துணையாம், மாய லீலன் எல்லோர்க்கும் புகலாய் உள்ளோன் தர்மத்தை தரணியில் தாங்கும் தீயதை தோற்க வைப்பவன்

உலகம் கொண்டோன், பெரிய வடிவோன் ஒளியின் வடிவன், அரூபனாம் அநேகமூர்த்தி, விளக்கமற்றோன் பல ரூபன், அநேக முகன் ஒன்றாய், பலவாய், இனிதானோன் தொழுவோர்க்குத் துணை அவன் உலகின் புகழாம், உலகநாதன் மாதவன், பக்த வத்ஸலன்

பொன் நிறத்தோன், கனகாங்கன் தோள்வளை பூண்ட மேனியன் வீரனாம், நல்லோர் நேயன் முரண்படா குணவான், வாயு உயர்ந்தோன், கௌரவம் கொண்டோன் உலகத் தெய்வம், சுமங்களன் உதிப்பான் யாகங்கள் போற்ற ஸத்ய-ஞானன், மலை-கொண்டோன்

தேஜோமயன், சக்திமான் தலைசிறந்த படைத் தலைவன் காப்பவன், தீயவர் காலன் கதனின் பெரியோன், படை வெல்வோன் நான்கு வடிவன், நான்கு தோளன் நான்கு வ்யூகன், நான்கிடந்தோன் நான்கு போறியோன், நான்கு பேறோன் நான்கு வேதன், ஒரு பாதன்

சுகம் வென்றோன், சூத்ரதாரி எதிரிலோன், அரிதான திருவடி அரியவன், எளியவர்க் கெளியோன் தீயவர்க்குத் தடை அவன் சுபாங்கன், மார்க்கம் காட்டிடுவான் அழைத்தே அசுரரை மாய்ப்பான் இந்திரன் செய், தொழிலும் செய்வான் வரையில்லா வரதன், வேதன்

இச்சையால் இயங்கும் அழகன் ரத்ன நாபன், சுடர் கண்ணன் பூஜா நாயகன், மீனன் ஜயந்தன், அனைத்தும் வென்றோன் ப்ரணவரூபன், அரிதானோன் வாக்கில் ஆற்றலுள்ளவன் உயர்ந்தவன், பெரும் மாயன் பெரும் வடிவம், உயிர் நிதியோன்

ஸ்படிகள், வராகன், தூயன் கேட்போர்க்கு கேட்டதை தருவான் பக்தருக்கு அம்ருதவான் பலவழியில் பக்தருக்கருள்வான் எளியன், கைவிடா நேயன் சத்ருவை ஸம்ஹரிப்பவன் மேலினும் மேலவன் பரமன் சாணுர்ரக்கனை மாய்த்தவன்

ஏழு நாக்கு, எண்ணிலா கிரணம் அனல் ஏழு, ஏழு அஸ்வங்கள் அகத்திலடங்கா புண்யன் பணிவோர் பயம் தீர்ப்பவன் தூண் துரும்பிலும் அவன் உள்ளான் குணங்கள் இல்லாத குன்று எதிலும் இயங்கும் இயக்கம் உலகத்தை ஆக்கி ஆள்பவன்

பூமியின் பாரம் தாங்கும் ஞானத்தின் யோக நாயகன் இளைப்பாற்றும் முக்தன், சரணன் கரை சேர்க்கும், வாயு வாகனன் பெரிய வில் வீரன் சூரன் பாடம் புகட்டிடும் தலைவன் அபார புகழ் கொண்ட தோழன் பொருளாய், பயனாய் உள்ளோன்

உத்தமன், சாந்தமான், ஸத்யன் ஸத்யமான தர்மசீலன் நினைக்கின்ற வரம் அருளும் ப்ரியவான், ப்ரீதி வளர்ப்பவன் பதத்தை அருளும் பரமன் வேள்வி ஏற்றிடும் கனவான் அயனம் மாற்றிடும் சூர்யன் மழையைப் பொழியும் கண்ணன்

அளவே இல்லா அழகன் மோட்சம், சுகமளிப்பவன் சாதுக்கள் பாலனத்தை செய்யும் ஆதாரன், அற்புதன் கனல் தானான காலன் சூரியன் உயிர் உறை நாதன் மங்களம் தந்திடும் மலையோன் பக்தரின் மங்களக் கண்ணன்

சுதர்சனப் பெருமான் சேஷன் ஆணை இடுகின்ற அரசன் வேதப் பொருள் ஆன வேதன் ஞானம் உடையவர்க்கெளியன் அழகான பெரியோன் பலவான் வேகமாய் இயங்கும் சமர்த்தன் அறிவுள்ளவன், பயம் தீர்ப்பவன் நாமம் சொல்வதது புண்யம்

பிரவிக் கடல் கரை சேர்ப்பான் புண்யன் துர்சொப்பனநாசன் வீரவான், காப்பவன், சாந்தன் உயிரெனப் பரவி நிற்பவன் அனந்த ரூபன், செல்வந்தன் குணமுள்ளோன், பயம் தீர்ப்பான் அளவில்லா பரம் ஆத்மன் விரும்பும் பலனளிப்பவன்

அனாதி புவி அவன் செல்வன் இருதோள், மங்களன் சுபன் உயிர்கள் உயர் ஆதாரன் அசுரர் அஞ்சும் சூரனாம் ஆதாரமானான் புவியின் புஷ்பமாக மலர்ந்திடுவான் உயர்ந்தவன், நல்வழி சேர்ப்பான் ப்ராணனாய், புண்யமும் தருவான்

ஒடுங்கும் ப்ராணன் அவனில் காற்றெனக் கலந்து நிற்பவன் ப்ரும்மன், எவ்வுயிரும் அவனே ஜனன, மரண நிலையற்றவன் தாயுமாய், தந்தையும் ஆனான் ப்ரம்மன் தந்தை அவனே யக்ஞம், யக்ஞபலன், கர்த்தா யாகத்தின் அங்கமும் அவனே

வேள்வியாய், வேள்வியின் பொருளாய் வேள்விகள் ஏற்குமதிபன் யக்ஞங்களின் சூக்ஷம பொருளாய் உலகை உணவாக ஏற்பவன் ஆத்மயோனி சுயம்ப்ரகாசன் வராகன், சாம கீதப்ரியன் தேவகி நந்தனன், தலைவன் க்ஷணத்தில் பாபம் தீர்ப்பவன்

சடங்குகள், வாளினைக் கொண்டோன் சார்ங்க வில்லும், கதையும் கொண்டோன் சுழற்சக்கரம் கை கொண்டோன் எவரும் வணங்கிடும் இறைவன் எவரும் வணங்கிடும் இறைவன் அவனே வனமாலை, கதை, சார்ங்கம் சங்கு, சக்கரம், வாளை உடையோன் ஸ்ரீமந் நாராயணன் விஷ்ணு வாஸுதேவன் காதித்வே ஸ்ரீ வஸுதேவனே என்றும் எமை காக்க

இதே போல் கீர்த்தனம் செய்ய கேசவன் தன மகிமை சொல்லும் நாமம் ஆயிரம் அழகோடு குறைவின்றிக் குவிந்ததே தினமும் கேட்போர், துதிப்போர் ஒரு துன்பம் தொடராமலே இகத்திலும் மற்றும் மேல் உலகில் காண், இன்பத்துடன் வாழ்வானே

ப்ராம்மணர்கள் உண்மை உணர்வார் க்ஷத்ரியர் வெற்றியும் பெறுவார் வைஸ்யர், நிறை செல்வம் பெற்றே பிறரும் சுகம் அடைந்திடுவார் தர்மத்தைக் கேட்டவர் பெறுவார் செல்வத்தை வேண்டி பெற்றிடுவார் இல்வாழ்க்கை கேட்பவர் கையில் இறைவன் பாதமும் கிட்டிடும்

பக்திமான் இத் துதிகளெல்லாம் நிதம் ஒரு மனம் கொண்டுமே பெயர்கள் வாஸுதேவன் தன் சொன்னால் என்றும் உயர்ந்திடுவான் அது தரும் புகழ் கீர்த்தி உயர் தலைவனாய் ஆவான் அழகுத்திரு மகள் சேர்வான் என்றும், எதிலும் வெற்றியே

தைர்யம் அவன் பெறுவானே வீரம், தேஜஸ்ஸை அடைவானே வருத்தும் நோய்கள் அகலும் பலமுள்ள தேகவான் ஆவான் ரோகங்கள் அவனைவிட் டகலும் சிறையின் கதவுமே திறந்திடும்

பயம் என்றுமே வாராது இடரின் இன்னல்கள் இல்லையே

பக்திக் கடல் தினம் பொங்க பரமனை, புருஷோத்தமனை உயர் நாம, மொராயிரங்கள் சொல்வோன், தடை வெல்லுவரே வாஸுதேவன் பாதம் பக்தருக்கு பரம்பொருளாம் ஸகல பாவம் பறந்தோடும் தூய ப்ரம்ம நிலை தரும்

ஸ்ரீ வாஸுதேவ பக்தர்க்கு சுபமே, என்றுமே, வரும் ஜனன, மரண, பிணிகளாலே வரும் துன்பங்களில்லையே இது தரும் புகழ், செல்வம் சிரத்தை, பக்தி உள்ளவர்க்கு தைர்யம், பொறுமை, சுகம், சாந்தி நல்உளம், நலங்களும் பெறுவான்

பேராசைத் தரும் கோபங்கள் பொறாமை, கேடு செய்மதியும் தொடர்ந்தே தரும் பாவங்கள் தொடராது அவன் பக்தரை சுடர் ஒளி சந்திரன், நக்ஷத்ரம் வானமும், பூமியும், கடலும் வாஸுதேவனின் வீர்யத்தால் உண்டு என்றும், நிலை பெற்றே

அசுராதிபர், கந்தர்வர் துயர் கூட்டிடும் ராக்ஷஸர் ஜகத்திலே இருப்பராவார் கிருஷ்ணா உன், அடிபோற்றுவார் இந்த்ரியங்கள், மனம், புத்தி தைர்யம், தேஜஸ், உடல் உயிரும் வாஸுதேவன் வசம் ஆகும் அவனே அகிலத்தனோர் விதை

தர்மத்தினாலே ஆசாரம் அதுவே முதன்மையாகும் வேதத்தின் கூற்றும் இதுவே தர்மத்தின் ப்ரபு அச்சுதனை ரிஷிகள், முன்னோர், தேவர் பஞ்சபூதங்கள் தாதுவும் உலகமும் அவனிடம் தோற்றம் ஜகம் நாராயணன் வசம்

யோகம், ஞானம், தரும் ஸாங்யம் வித்தை, சிற்பங்கள் ஆவதும் வேதம், சாஸ்த்ரங்கள், விக்ஞானம் தோற்றம், கண்ணன் பார்வையில் ஆவான் விஷ்ணு ப்ரபஞ்சங்கள் உயிர், காணும் காட்சியென மூன்றாகும் உலகம் எல்லாமும் புசிப்பவன், அழிவு இல்லாதவன்

நலம், தரும் பகவானே விஷ்ணுவின் புகழாகும் கீர்த்தநம் வ்யாஸர் உரைத்தார் அழகாய் சொல்லுவோர் பெறுவோர் சுகங்களை விஸ்வேஸ்வரன் அவன் ஆவான் உலகப் படைப்பவன் கண்ணன் தினம் தொழும், பக்தரெல்லாம் உயர் வெற்றி உடன் பெறுவார் உயர் வெற்றி உடன் தரும் ஒரு வழி இது

Vishnu Sahasranamam Stotram Lyrics In Tamil

அர்ஜுனன் உரைப்பான்

தாமரைப்பூ வளர் கண்ணன் தேவருக்குள் சிறந்தவனே காப்பாயே, அடி பணிவோரை நல்லோர் பணி ஜனார்த்தனா

ஸ்ரீ பகவான் உரைத்தார்

இந்த நாமமாயிரத்தை சொல்லும் அடியவர் துணை நான் பாடல் ஒன்றாலே அருள் தருவேன் அது இதுவே, ஐயம் வேண்டாம் ஒரு பாடல் தருமே அது இது ஆகும்

வ்யாஸர் உரைப்பார்

உலகமே உறைவிடம் ஆகும் வாஸுதேவன் வசிப்பதாலே உயிரனைத்தில் வாழுகின்ற வஸுதேவ வந்தனமே வஸுதேவன் வந்தனம் இதுவே ஆகும்

பார்வதி உரைப்பாள்

எதுவோ வழியாகும் உரைக்க விஷ்ணு நாமமாயிரம் பண்டிதர் சொல்வார் தினமும் அறியும் மார்கத்தை சொல்வீர்

ஈஸ்வரன் உரைப்பார்

ஸ்ரீ ராம ராம ராம எனும் உயர் மந்திரம் அதி உத்தமம் சிறந்த நாமமாயிரமும் தரும் புண்யம் இது தருமே ஸ்ரீ ராம நாமம் புண்யமது உடன் தருமே

ப்ரம்மா உரைத்தார்

நிலைத்து நிற்கின்ற ஆயிரம் ரூபனே சிரங்கள், பாதங்கள் அநேகம் கொண்டாய் நாமம் ஆயிரம் கொண்ட திருமாலனே யூகங்கள் கோடி ஆண்டிடுவாய் போற்றி ஆயிரம் கோடி யூகமாள்பவனே சரணம்

ஸஞ் ஜயர் உரைத்தார்

எங்கு யோகேஸ்வரன் க்ருஷ்ணன் எங்கு வீரன் அர்ஜுனனோ அங்கு உண்டு, விஜயம், செல்வம் பெரும் தர்மம் நிலைத்திட

ஸ்ரீ பகவான் உரைத்தார்

பிறிதொரு சிந்தனை இல்லா பக்தனின் மனமென்னிடம் அவனைக் காக்கின்ற காப்பாவேன் யுகங்கள் தோறும் தோன்றிடுவேன்

கரம் கொடுப்பேன் நல்லோர்க்கு அழித் திடுவேன் தீயோரை தர்மம் என்றென்றும் நிலை பெறவே அவரிப்பேன் யுகம் யுகமாய்

துன்பம், விசாரம், பயமூட்டும் கொடுநோய் மாறாததும், மனத்துயர் ஆகுமாமே சொல்கின்ற நாராயண மந்திரத்தாலே விரைந்து ஓடும், சுகம் வந்து சேரும்

உடலாலே மற்றும் மனதாலே செய்யும் புத்தியின் இயல்பாய், பூமியில் கருமம் தினம் நடக்கும் செயல்கள் எல்லாம் நாராயணன் பதம் சமர்ப்பிக்கிறேன்

Leave a Reply